துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதிஅல்நடக் (வயது 26). இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்டிருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.மனைவி மீது மிகவும் அன்பு கொண்ட ஜமால் அல்நடக், அவருக்காக ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி உள்ளார்.
இந்நிலையில் தனது மனைவி நீச்சல் (பிகினி) உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்ட நிலையில் அவருக்காக ஜமால் அல்நடக் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார்.இதுதொடர்பாக சவுதி அல்நடக் அந்த தனியார் தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 24 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவின் சரியான இருப்பிடத்தை வெளியிட சவுதிஅல்நடக் மறுத்து விட்டடார். ஆனால் தனக்காக தனது கணவர் ஜமால் அல்நடக் தீவை வாங்குவதற்காக 50 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 418 கோடி) செலவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சவுதிஅல்நடக் கூறுகையில், எனது கணவர் வாங்கிய தீவு ஆசியாவில் உள்ளது. தனியுரிமை காரணங்களுக்காக நாங்கள் தீவின் சரியான இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றார்.ஏற்கனவே சவுதிஅல்நடக் தனது ஆடம்பர வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தவர் ஆவார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதிஅல்நடக்கின் பிறந்தநாளன்று அவரது கணவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததாக சவுதிஅல்நடக் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. அதில் சவுதி அல்நடக் ஷாப்பிங் செய்வதற்காக ரூ.12 லட்சம் செலவழித்தாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும் கூறியிருந்தார்.மேலும் ஹெர்ம்ஸ் பிராண்ட்டின் ஷோரூமுக்கு மனைவியை அழைத்து சென்ற ஜமால் அங்கே ரூ.29 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.இதைத்தவிர அழகு சிகிச்சைகளுக்காக செலவழித்த பணம் உள்பட ஒரே நாளில் தனக்காக ரூ.60 லட்சம் வரை செலவழித்ததாக சவுதி அல்நடக் வீடியோவில் கூறியிருந்தார். அந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.இதுதொடர்பாக, சவுதி அல்நடக் கூறுகையில், எனது வாழ்க்கை முறையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு வருகிறது என்று எனக்கு புரியவில்லை என கூறியுள்ளார்