Newsline Srilanka

Give a Voice to Voiceless Peoples

Some Schools Closed

சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நாளை (14) மற்றும் நாளை மறுதினமும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.