இம்முறை 2024 பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நிலையில் என்றும் இல்லாத அளவு அதிகளவான வேட்பாளர்கள் களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 690 வேட்புமனுக்களின் கீழ் 8388 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டம் கொத்மலை தேர்தல் தொகுதியில் ஸைத் அஹமத் (Zaid Ahamed) எனும் 21 வயது வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.இது இலங்கையில் மிக அரிதான விடயமாகவே மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்ட கல்வியை தொடரும் குறித்த வேற்பாளர் உதயசூரியன் சின்னத்தில் “ஊழல்வாதிகள் அற்ற எதிர்க்கட்சி” எனும் தொனிபொருளில் மாற்றத்தை நோக்கி நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களின் அரசியல் பிரவேசம் முன்னேற்றகரமான ஜனநாயகத்திற்கு முக்கிய பங்களிப்பதோடு புதிய சிந்தனைகள் மூலம் நாட்டை வலுப்பெற செய்யும் என நம்புகின்றோம்.