Newsline Srilanka

Give a Voice to Voiceless Peoples

110 கோடியுடன் மெகா ஏலத்துக்கு காத்திருக்கும் பஞ்சாப்

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டது.அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது.

பஞ்சாப் 2, ஆர்சிபி 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 என வீரர்களை தக்க வைத்துள்ளனர்.இந்நிலையில் ஒவ்வொரு அணியிடம் மீதம் எத்தனை கோடி உள்ளது என்ற தகவலை பார்க்கலாம்.

அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடியும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் உள்ளது.2025 ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகையின் விவரம்,

சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.55 கோடி

மும்பை இந்தியன்ஸ் – ரூ.45 கோடி

லக்னோ – ரூ.69 கோடி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ரூ.45 கோடி

குஜராத் டைட்டன்ஸ் – ரூ.69 கோடி

பஞ்சாப் கிங்ஸ் – ரூ.110.5 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ.51 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ.41 கோடி

ஆர்சிபி – ரூ.83 கோடி

டெல்லி கேப்பிட்டல்ஸ் – ரூ.73 கோடி