கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 24 மடங்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டு ரின்கு சிங் ரிடென்ஷன் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை நிர்வாகம் விடுவித்துள்ளது.ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் வீரர்களை தக்க வைத்துக கொண்டும், விடுவித்தும் உள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு அணிகளால் ரிடென்ஷன் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.எதிர்பார்த்தவாறு, சென்னை அணியில் தோனி, ருதுராஜ், ஜடேஜா, சிவம் துபே மற்றும் பதிரனா ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோன்று ஒவ்வொரு அணியும் 2 முதல் 6 வீரர்கள் வரை ரிடென்ஷன் செய்திருக்கிறது.இந்த ரிடென்ஷனில் கொல்கத்தா அணியை சேர்ந்த ரின்கு சிங்கிற்கு தொடக்கத்தில் அவர் பெற்றதை விடவும் 24 மடங்கு சம்பளமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 55 லட்சத்திற்கு அணியில் எடுக்கப்பட்ட அவரை நிர்வாகம் ரூ. 13 கோடி வழங்கி ரிடென்ஷன் செய்திருக்கிறது.நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரின்கு சிங் மொத்தமே 168 ஓட்டங்களை எடுத்துள்ளார். இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் அவரை ரிடென்ஷன் செய்திருக்கிறது.
இதேபோன்று, அதிர்ச்சி தரும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் அணி தலைவர் கே.எல்.ராகுல், டெல்லி அணியின் அணி தலைவர்ரிஷப் பந்த், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அணி தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் அணி தலைவர் ஷிகர் தவான், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அணி தலைவர் ஃபாஃப் டூப்ளசிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.அதிலும் குறிப்பாக ஐபிஎல் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அணி தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் விடுவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.