Newsline Srilanka

Give a Voice to Voiceless Peoples

பிக்பாஸ் சீசன் 8 இல் 5 வைல்ட் கார்ட் எண்ட்ரி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 8 ஆவது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது.விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இந்த வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படவுள்ளார்.

இந்நிலையில், இன்று பிக்பாஸ் சீசன் 8 வீட்டில் வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுக்கவுள்ளார்களாம்.அதாவது 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தால் 19 போட்டியாளர்களாக மாறும்.நடிகர் ராணவ், மாடல் வர்ஷினி வெங்கட், விஜய் டிவியின் டிஎஸ்கே, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளர் மஞ்சரி, நடிகை சுஜா வருணியின் கணவர் நடிகர் சிவாஜி தேவ் ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அப்படி என்றால் நோ எவிக்‌ஷன் இந்த வாரம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது